பத்திரிகையாளர்களிடம் சண்டைக்கு போன நடிகை டாப்ஸி

ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தன. ஆனால், சமீப காலமாக டாப்ஸி நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்திலும், இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘டோபரா’ படத்தில் டாப்சி நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை டாப்ஸி தாமதமாக வந்ததாகவும், ஏன் லேட் என பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்க பிரச்சனை வெடித்திருக்கிறது. எனக்கு சொன்ன டைமுக்கு நான் வந்திருக்கேன், என்னை எப்படி லேட்னு சொல்லலாம் என நடிகை டாப்ஸி அந்த பத்திரிகையாளரிடம் கேட்டு உள்ளார்.

நான் கேமரா முன்னாடி நிற்கிறேன். நான் எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும். கொஞ்சம் நீங்களும் கேமரா முன்னாடி வந்து பேசினால், நீங்க எப்படி கேள்வி கேட்டீங்கன்னு புரியும். எப்போதுமே நடிகர்கள் தான் தவறு செய்வார்கள் என பொரிந்து தள்ளி விட்டார்.

ஆலியா பட்டின் டார்லிங்ஸ், அமீர்கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்களை தடை செய்வதாக ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், தங்களுடைய டோபாரா படத்தையும் தடை செய்ய பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்கும் என சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பேசிய நிலையில், பத்திரிகையாளர்களுடன் டாப்ஸி மல்லுக்கு சென்றதே புரமோஷன் யுக்தியாக இருக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools