பயங்கரவாதிக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் – முட்டுக்கட்டை போடும் சீனா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா அமைப்புக்கான தடை கமிட்டியின் கீழ் மகமூத் பயங்கரவாதியை, கருப்பு பட்டியலில் வைப்பதற்கான முன்மொழிவை இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது.

ஏற்கனவே, லஷ்கர் இ தொய்பாவின் சஜீத் மிர், ஜமாத் உத் தாவா அமைப்பின் அப்துல் ரெஹ்மான் மக்கி, அப்துல் ரவுப் அசார், ஜெய்ஸ் இ முகம்மது தலைவர் மசூத் ஆசார் ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாமல் தடுத்து சீனா பாதுகாத்து வருகிறது. இதில் சஜீத் மிர் என்பவன் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools