பாடலாசிரியர் வைரமுத்து காதலர் தின வாழ்த்து

ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம். ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம் தான் காதல். அந்த முதல் அனுபவம் வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools