X

பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி போட்டி இல்லை!

உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தலா 38 தொகுதியில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியை அவர்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை.

ஆனால் அமேதி, ரேபரேலியில் மட்டும் போட்டி இல்லை என்றும் அறிவித்தனர். இந்த தொகுதிகளில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவதால் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்த வில்லை என்று தெரிவித்து இருந்தனர்.

கடந்த மகளிர் தினத்தன்று அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள். கண்ணூஜ் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ், அசம்கார்க் வேட்பாளராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதே போல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நஜினா அல்லது அம்பேத்கர்னாகர் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது கட்சி தலைவர்களான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் போட்டியிட வில்லை. கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 11 பிரசார ஊர்வலங்கள் நடத்த மாயாவதி திட்டமிட்டு இருக்கிறார்.

இதேபோல் அவர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 30 பிரசார ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

Tags: south news