பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையடுத்து ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 1 முதல் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதனை புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ‘இரண்டுல ஒன்னு பாத்தர்லாம்’ என்று கூறியிருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema