பிரசார மேடையில் மயங்கி விழுந்த அமைச்சர் ராஜ்நாத் சிங் – பஞ்சாப்பில் பரபரப்பு

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சென்று வழிபட்டார். அதன்பின், அவர் பரிட்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார மேடையில் அவருக்கு அணிவிக்க பெரிய மாலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது மேடையில் நின்றிருந்த பா.ஜ.க. தலைவர்கள் இடையே அவருக்கு யார் மாலையை அணிவிப்பது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக  ராஜ்நாத் சிங் தடுமாறி பின்பக்கமாக இருந்த சோபாவில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், இதுவரை எங்கள் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்க யாராலும் முடியவில்லை என தெரிவித்தார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools