X

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷால்

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தற்போது இவர் கைவசம் ‘லத்தி’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.