பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் கூட இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.

சமீபத்தில் கையெழுத்தான வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுபடுத்தும் வகையில் அமைந்தது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நட்புறவு வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக உறவுகளை கொண்டாடும் விதமாக, தன் குடும்பத்திற்காக, இந்திய உணவு வகையான கிச்சடியை, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்
மாரிசன் சமைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மாரிசன், அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டாடும் விதமாக, என் அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் புகழ்பெற்ற
கிச்சடி உணவு வகையை, ஆஸ்திரேலியாவில் சமைத்துள்ளேன். இது அவருக்கு மிகவும் பிடித்த உணவு என குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools