பிரதமர் மோடியின் தாயார் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்… அம்மா!” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools