பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கிடையே, பிப்ரவரி 1-ம் தேதி 2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools