பிரான்ஸில் கட்டிடங்கள் இடிந்து விபத்து – இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை

தெற்கு பிரான்சின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது இடிபாடுகளில் இருந்து கரும்புகைகள் எழுவதை வீடியோக்களில் காட்டுகிறது. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே மூன்றாவது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கியிருந்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், அப்பகுதியில் உள்ள 30 கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools