பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில், இன்று இந்தியா வருகிறார்.

பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைகிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ரோடுஷோவில் கலந்து கொள்கிறார். இருவரும் இணைந்து சில வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை பார்வையிட இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இமானுவேல் மேக்ரான் பார்வையிட இருக்கிறார். அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வையும் பார்த்து ரசிக்க உள்ளார். டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் சங்கானேரி வாசல் வரை மோடி மற்றும் மேக்ரான் ரோடுஷோ நடத்த உள்ளனர்.

ராம்பேக் அரண்மனையில் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் மேக்ரான் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news