பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – அரையிறுதியில் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்க்ள் முடிந்து காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆண்கள் காலிறுதி போட்டி ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் வெரெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஆஸ்திரியா நாட்டின் டொமினிக் தீம் ரஷ்யா நாட்டை சேர்ந்த கரென் கச்சனோவுடன் மோதினார். இதில் டொமினிக் தீம் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து, இன்று மாலை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரரும், ரபெல் நடாலும் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச்சும், தீமும் மோதுகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news