புதிய சாதனை நிகழ்த்திய கிறிஸ்டியானா ரொனால்டோ

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools