புதுமைப்பெண் திட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அழைப்பு

புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், விழாவில் சிறந்து விருந்தினராக பங்கேற்கவுள்ள 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools