புரோ ஹாக்கி லீக் தொடர் – அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை பெற்றது. 4-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools