பூஸ்டர் தடுப்பூசி குறித்து தேசிய தொழில்நுட்பக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது

இந்தியாவில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட இரண்டு டோஸ்கள் போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இரண்டாவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன.

ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது ஒமைக்ரான் உருமாற்றம் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் வீரியம் அதிகமாக இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் தேவை என கருதப்படுகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம்தானா? என்பது குறித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools