பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்துள்ளது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதையே இந்த குறியீட்டு அறிக்கை அம்பலப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருக்கிறது.

பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று வாய் கிழியப் பேசும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விட, பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் தான் இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் வார்த்தை ஜாலங்கள் மற்றும் வெற்று பேச்சுகளால் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools