பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் – மலேசியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் தொடர் வங்களாதேசத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்று உள்ள இந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நேற்று மலேசியாவை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மலேசிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இந்திய தொடக்க வீராங்கனை சபனேனி மேகனா 69 ரன்கள் குவித்தார். ஷபாலி வர்மா 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மலேசிய அணி களம் இறங்கியது. 5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

இதன் மூலம் இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools