X

பெரு நாட்டில் கொரோனாவால் பலியாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 21-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.