X

பெர்த் டெஸ்ட் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது

ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது டெஸ்டை கைப்பற்றும் உத்வேகத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும், முதல் டெஸ்ட்டை வென்ற உற்சாகத்தில் இந்திய வீரர்களும் களமிறங்குகின்றனர்.

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

அணி விபரம்:

1. லோகேஷ் ராகுல், 2. முரளி விஜய், 3. சத்தீஸ்வர் புஜாரா, 4. விராட் கோலி, 5. அஜின்க்யா ரஹானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. இஷாந்த் சர்மா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. ஜேஸ்பிரிட் பும்ரா

ஆஸ்திரேலியா:

1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.

Tags: sports news