பேட்ஸ்மேன்கள் தங்களை மாற்றிக்கொண்டால் இங்கிலாந்து டெஸ்டில் சாதிக்க முடியும் – யுவராஜ்சிங் கருத்து

இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

உலகடெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் முதல் டெஸ்டில் தோற்றாலும், அடுத்த இரு டெஸ்டில் சரிவில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடி வருவதால் அந்த வகையில் இந்தியாவை விட அவர்களே ஒரு படி மேலே இருப்பார்கள்.

பேட்டிங்கில் ஒப்பிடும்போது நியூசிலாந்தை விட இந்தியாவின் பேட்டிங் வரிசை வலுமிக்கது. ரோகித் சர்மா இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவசாலியாக மாறி விட்டார். ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இணைந்து இங்கிலாந்து மண்ணில் தொடக்க ஆட்டக்காரராக ஆடியதில்லை. டியூக்ஸ் வகை பந்து ஆரம்பத்திலேயே ஸ்விங் ஆகும் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி சீக்கிரமாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது காலையில் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும். ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் திரட்ட முடியும். தேனீர் இடைவேளைக்கு பிறகு பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால் வெற்றிகரமாக செயல்பட முடியும் எனதெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools