பேய் படமாக உருவாகும் ‘கைலா’

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு “கைலா” என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். பாஸ்கர் சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பரணி செல்வம், இசை – ஸ்ரவன், படத்தொகுப்பு – அசோக் சார்லஸ், பாடல்கள் – வடிவரசு, கலை – மோகன மகேந்திரன், நடனம் – எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.சுப்புராஜ், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – பாஸ்கர் சீனுவாசன்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.

பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools