‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அப்டேட்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பாடல் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools