போதைப் பொருளுக்கு எதிராக மிக்கப்பெரிய இயக்கத்தை தொடர்ங்க இருக்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதை கையாண்ட விதம், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை எவ்வாறு உள்ளது? எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

* புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும்.

* திட்டங்களை கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இருக்கிறது.

* தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

* போதைப்பொருள் நடமாட்டம் என்பது சட்டசம்-ஒழுங்குப்பிரச்சனை மட்டுமல்ல சமூக ஒழுங்குப் பிரச்சனை.

* போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும், இதற்காக பெரும் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

* போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

* போதைப்பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

* ‘மக்களுடன் முதலமைச்சர்’ திட்டத்தை ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை ஊரகப்பகுதிகளில் செல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மற்றும் “நீங்கள் நலமா?” போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.

* பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் பிரச்சனைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools