போலி பாஸ்போர்ட்டுடன் பராகுவே நாட்டில் சிக்கிய கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ

பிரேசில் கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 39 வயதாகும் இவர் தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பராகுவே சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் ஆசுன்சியோனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அப்போது போலீசார் அவரிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ரொனால்டினோ பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடியும்வரை ஹோட்டலில் இருந்து வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

போலீசார் அவரது பாஸ்போர்ட்-ஐ பரிசோதனை செய்ததில் அது போலி எனத் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட்டில் ரொனால்டினோ டி ஆஸ்சிஸ் மொரைரா எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் 7-ந்தேதி பாஸ்பார்ட் வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பிரேசில் இருந்து பிரேசில் அணிக்காக விளையாடி உலக புகழ் பெற்றவர். ஆனால், பராகுவே சொந்த நாடு எனத் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news