X

ப.சிதம்பரம் ஜாமீன் மீதான விசாரணை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி கைது செய்தது.

அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரது நீதிமன்ற காவலை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இதற்கிடையே ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: south news