மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

 

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத
வேண்டும்.

லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்

இந்நிலையில், ஹாமில்டன் நகரில் இன்று காலை நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில்
பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools