மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் அட்டவணை வெளியீடு

ஐசிசி சார்பில் மகளிர்க்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்க மண்ணில் பிப்ரவரி 10 முதல் 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன. குரூப் 1-ல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் உள்ளன.

இந்திய அணி பிப்ரவரி 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப்ரவரி 15), இங்கிலாந்து (பிப்ரவரி 18), அயர்லாந்து (பிப்ரவரி 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

23 பிப்ரவரி அரை-இறுதி 1 கேப் டவுன், 24 பிப்ரவரி- ரிசர்வ் டே கேப் டவுன் 24 பிப்ரவரி அரை-இறுதி 2 கேப் டவுன், 25 பிப்ரவரி- ரிசர்வ் டே கேப் டவுன் 26 பிப்ரவரி- இறுதி கேப் டவுன், 27 பிப்ரவரி ரிசர்வ் டே கேப் டவுன்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools