மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரை விரிவுப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்

மகளிர் ஐ.பி.எல். எனப்படும் மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (டபிள்யூ.பி.எல்.) கடந்த மாதம் மும்பையில் இரு மைதானங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 5 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை உச்சிமுகர்ந்தது.

அடுத்த சீசனில் இந்த போட்டியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்படி மும்பையுடன் ஆமதாபாத், டெல்லி, லக்னோ, பெங்களூரு ஆகிய இடங்களிலும் ஆட்டங்கள் நடக்கும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு இந்த போட்டி பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த போட்டியை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools