மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக ரெயில் சோதனை வெற்றி

சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரெயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கு என்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த அதிவேக ரெயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல் படக் கூடியது. இந்த ரெயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால், இந்த ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது 2 கி.மீ வழித் தடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ரெயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில கழகம் இணைந்து அதிவேக ரெயில் திட்டத்தை மேற் கொண்டு வருகிறது.

அதிவேக ரெயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools