மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு உடல் நிலை பாதிப்பு

மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார்.

டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மேடையில் இருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் டார்ஜிலிங் பா.ஜ.க. எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools