மனைவிக்கு வெங்காய நகைகளை பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌‌ஷய் குமார். இவர் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கரீனா கபூர் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார்.

நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வு எதிரொலிப்பதால் அந்த நிகழ்ச்சியில் கரீனா கபூருக்கு பரிசாக வெங்காய தோடு வழங்கப்பட்டது. அந்த வெங்காய தோட்டை கரீனா கபூர் பெரிதாக விரும்ப வில்லை.

இதனால் தனது மனைவிக்காக அதை கேட்டு வாங்கி வந்துள்ளார் அக்‌‌ஷய். இதுகுறித்து அக்‌‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டுவிங்கிள் தனது பதிவில், ’எனது கணவர் எனக்காக இந்தப் பரிசை வாங்கி வந்துள்ளார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கரீனாவுக்கு வழங்கப்பட்ட இந்தக் காதணியை அவர் பெரிதும் விரும்பவில்லை போல. எனக்கு பிடிக்கும் என நினைத்து இதை அக்‌‌ஷய் வாங்கி வந்துள்ளார்.

சில நேரங்களில் சின்ன சின்ன வி‌ஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்” என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கூட கணவர் அக்‌‌ஷய் குமார் தனக்காக செய்த காபியைப் புகைப் படம் எடுத்து வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப் படமும் வைரல் பட்டியலில் இடம்பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools