மனைவி குறித்து கஸ்தூரி வெளியிட்ட பதிவு – பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டு நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

சில தினங்களுக்கு முன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டனர். அப்போது அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரான போது இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். இதன்பின் பேசிய அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? ” என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான், “காதலுக்கு மரியாதை” என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools