மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326. இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 1768 ஆகும்.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 25-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது.

மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news