மாணவர்களுக்காக 4 மாவட்டங்களில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் பணியை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. ஆன்-லைன் மூலம் ஹால் டிக்கெட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு வசதி இல்லாத மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நான்கு மாவட்ட மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று ஹால் டிக்கெட் பெறுவதற்காக 63 தடங்களில் 109 சிறப்பு பேருந்துள்கள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் காலை 9 மணிக்கும், மாலை 4 மாணிக்கும் பள்ளி கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news