மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை தீர்மாணிப்பது நான் அல்ல – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார். இதற்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,” ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்பானிப்பது நான் அல்ல, நிதி குழு தான். நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள். பிடித்த மாநிலம், பிடிக்க மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news