மின்சார ரயில்களில் இருக்கும் முதல் வகுப்பு பெட்டிகள் நீக்கம்

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார சேவை கடந்த சில மாதங்களாக அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்குலர் மின்சார ரெயிலாக இந்த சேவை இயக்கப்படுவதால் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலைக்கு செல்லவும் வீடு திரும்பவும் வசதியாக உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட சர்க்குலர் மின்சார ரெயிலில் 3 முதல் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
நடுவில் ஒரு முதல் வகுப்பு பெட்டியும், முன்னால் ஒன்றும், பின் பகுதியில் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள முதல் வகுப்பு பெட்டியால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். பிளாட்பாரத்தில் அதன் பெட்டிகள் நிற்கும் நிலை குறித்த அறிவிப்புக்கு மாறாக சர்க்குலர் ரெயில் முதல் வகுப்பு பெட்டி மாறி நிற்பதால் பயணிகள் கண்டுபிடித்து ஏறுவதில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சர்க்குலர் மின்சார ரெயிலில் நடுவில் உள்ள முதல் வகுப்பு பெட்டியை அகற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
முன் மற்றும் பின் பகுதியில் மட்டும் முதல் வகுப்பு பெட்டிகள் இடம் பெறும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. என்றும், முதல் வகுப்பு பெட்டி இருக்கைகள் குறையாது என்றும் மாறாக 10 சதவீத இருக்கைகள் அதிகரிக்கும் என்றும் ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
நடுவில் உள்ள முதல் வகுப்பு பெட்டியை முழுமையாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பெண்கள் பெட்டியாக மாற்றப்படுகிறது. இதற்காக புதிதாக பெட்டியில் அளவு மாற்றி அமைக்கப்படுகிறது. முன் பகுதி மற்றும் பின்பகுதியில் இணைக்கப்படுகிற முதல் வகுப்பு பெட்டிகளில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் இருக்கைகள் அதிகரிக்கப்படுகின்றன. பெண்களுக்கு அதே பெட்டியில் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது.
இந்த திட்டம் சர்க்குலர் ரெயிலில் 2 மார்க்கத்திலும் புதிய மும்முனை இணைப்பு ஏ.சி. மின்சார ரெயில் என்ஜினில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools