மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணிக்காக கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனிக்கு அடுத்த நிலையில் உள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் இவரை ‘சின்ன தல’ என்று அழைக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக விளையாடவில்லை என்றால் உடற்தகுதி போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘என்னை நானே திருத்திக் கொண்டேன். மூட்டு காயத்தில் இருந்து மீண்டும் உடற்தகுதியில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். ‘யோ-யோ’பயிற்சிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அணியில் இடம் பெறுவதற்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனக்கு நேரம் சரியில்லாத காலத்தில் பெரிய வீரர்கள் ஆதரவாக இருந்துள்ளனர். எனக்கான சர்வதேச கிரிக்கெட் இன்னும் மீதமுள்ளது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news