முகமது ரிஸ்வானுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது நியாயம் அல்ல – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முகமது ரிஸ்வான் துணைக்கேப்டனாக இருந்தார். அவர் மோசமாக விளையாடியதன் காரணமாக நீக்கப்பட்டு, அனுபவ வீரரான முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சுமார் ஒரு வருடம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி அணியில் இணைந்துள்ளார்.

முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டதோடு, துணைக்கேப்டன் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணைக்கேப்டன் வழங்கப்பட்டது நியாயமானது அல்லது என்று முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷித் லத்தீப் கூறியிருப்பதாவது:-

இலங்கை தொடருக்கு சர்பராஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான திறன் அவரிடம் உள்ளது. ரிஸ்வான் ஃபார்ம் இன்றி தவிக்கும் போது சர்பராஸ் திரும்ப களத்திற்கு வந்து சிறப்பாக விளையாடினார். அவர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

ரிஸ்வானுக்கு மீண்டும் துணைக் கேப்டன் என்பது நியாயமானது அல்ல. பாபர் அசாம் எல்லா வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும். அதற்காக, துணைக் கேப்டன் பதவி கொடுக்க ஆதரவாக இருக்கக் கூடாது.

டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பொறுப்பு ஏற்கும் தகுதி இருக்குமென்றால், அது சர்பராஸ் மட்டுமே. இவ்வாறு லத்தீப் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில 335 ரன்கள் விளாசினார். 176 பந்தில் 118 ரன்கள் எடுத்ததுடன் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports