முடங்கிய யூடியூப் தளம்! – டிரெண்டாக்கிய நெட்டிசன்கள்

கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் இன்று காலையில் சிறிது நேரம் முடங்கியது. பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் யூடியூப் தளத்தில்  பயனர்கள் வீடியோவை பார்க்க முடியவில்லை.

இதையடுத்து பயனர்கள் பலர் தங்களின் அதிருப்தியை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். மீம்ஸ்களாகவும் வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘Youtube Down’ என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துக்களை சரமாரியாக பதிவிட்டதால், அந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools