முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டாக்டர் ராமமூர்த்தியின் சித்திர புத்தகம் ‘செலிப்ரேட்டிங் பி.ராமமூர்த்தி’!

சென்னையில் நடைபெற்று வரும் WFNS (நரம்பியல் அறுவை சிகிச்சை சங்கங்களின் உலகக் கூட்டமைப்பு) அறக்கட்டளையின் சந்திப்பையொட்டி, இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பி.ராமமூர்த்தியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ஒரு சித்திர புத்தகம், 2023 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது.

‘செலிப்ரேட்டிங் பி.ராமமூர்த்தி’ புத்தகத்தை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “டாக்டர் பி. ராமமூர்த்தியின் மருமகனும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கே.ஸ்ரீதர் என்பவரால் இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. “இந்தப் புத்தகம், என்னுடைய குருவிற்கான தட்சணையாகும். எனக்கு அவர் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் மட்டுமல்லாமல், எனது வாழ்க்கையையும் எண்ணத்தையும் பல வழிகளில் வடிவமைத்துள்ளார்” என்றார்.

இந்த நூலில் டாக்டர் ராமமூர்த்தியின் வாழ்க்கையைப் பற்றியும், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் சித்தரிக்கும் புகைப்படங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் நிகழ்ந்த நரம்பியல் அறிவியலின் வளர்ச்சியையும் பதிந்துள்ளது. பல ஆண்டுகளாக பேராசிரியர் ராமமூர்த்தியுடன் கலந்துரையாடிய இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்களின் தகவல்களும், ராமமூர்த்தி அவர்களால் வாழ்க்கை பெற்றவர்களின் குறிப்புகளும் இப்புத்தகத்தில் உள்ளன.

பேராசிரியர் ராமமூர்த்தியின் நினைவாகப் பெயரிடப்பட்ட ஒரு சொற்பொழிவை, அமெரிக்காவின் ரூட்கர்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் அனில் நந்தா அவர்களால் வழங்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள் இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் இயக்குநரும் வழிகாட்டியுமான மருத்துவர் கே.ஸ்ரீதர் ஒருங்கிணைக்க, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவேரி இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பைன் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools