முதல் முறையாக மாஸ்க் அணிந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப்

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார்.

அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை.

இந்நிலையில் நேற்று காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றார். அப்போது முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார். மேலும் ‘‘எந்த இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools