மும்பை அணிக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

ஐ.பி.எல். 15வது சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டெல்லி ஜெயித்திருந்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால் டெல்லி தோல்வி கண்டதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளே ஆப் அதிர்ஷ்டம் கிட்டியது.

இந்நிலையில், மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை திரில்லிங்கோடு பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு வீரர்கள் மும்பை அணி வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கொண்டாடினர்.

இதுதொடர்பாக, பெங்களூரு வீரர் விராட் கோலி கூறுகையில், இது நம்ப முடியாத ஒன்று. நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பை அணிக்கு நன்றி. இந்த ஆட்டத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என தெரிவித்தார்.

பெங்களூரு அணி நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools