ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதில் வைரலாகிறது

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அதுவும் போதிய வரவேற்ப்பு இல்லை.

தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருக்கிறார்.

ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து எடிட் செய்து வெளியீட்டு ‘ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயப்படுவதற்கு சமம். அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல் என கூறி பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools