ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வருகிற 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாக சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை வைத்துள்ளார். LEO படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள்… எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள். பார்வையாளர்களுக்கு ட்ரீட்டாக அமையும். அந்த 10 நிமிடத்திற்காக ஓராண்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema