ரசிகர்களை சந்தித்த நடிகர் சிம்பு! – தனது கையால் பிரியாணி பரிமாறினார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதையடுத்து பல படங்களில் நடித்த சிம்பு உடல் எடை காரணமான பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர் தீவிர உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்த இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து , ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ போன்ற படங்களின் வெற்றியின் மூலம் கவனம் பெற்றார்.

இந்நிலையில், சிம்பு நேற்று சென்னையில் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தும் பரிமாறியிருக்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools