ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று போட்டோஷூட் நடத்தும் நடிகர் ராகவா லாரன்ஸ்

திரையுலகில் முன்னணி நடிகர்கள் தங்களின் பிறந்த நாள் முன்னிட்டு ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றன

கடந்த முறை நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த அவரது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது ராகவா லாரன்ஸ்-க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர் ரசிகர்களுக்காக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வணக்கம் நண்பர்களே ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டார். மிகவும் மனவேதனையாக இருந்தது. அன்று, என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அவர்களுக்காக பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்துவேன்.

நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது. நாளை சந்திப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools