ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் – பென் ஸ்டோக்ஸ் கருத்து

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த உடன் போட்டிகளை மீண்டும் தொடங்கலாம் என ஒவ்வொரு நாடுகளும் நினைத்துக் கொண்டிருந்தன.

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் இறந்த போதிலும், மறுபக்கம் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் போட்டிகளை நடத்த கால்பந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளையும இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகளை நடத்தினாலும் சரியானதாகத்தான் இருக்கும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நம்முடைய நாட்டிற்காக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறோம். ஆகவே, ரசிகர்களுக்கு முன் விளையாடினாலும் சரி, ரசிகர்கள் இல்லாவிடிலும் சரி. போட்டி இதன் அடிப்படையில்தான் செல்லும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news