ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறதாம்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே, “எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools